நான் ரெடிதான் வரவா..? மாஸ் எண்ட்ரி குடுத்த ‘வுல்வரின்’! – Deadpool 3 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்!

செவ்வாய், 11 ஜூலை 2023 (09:38 IST)
ஹாலிவுட் ரசிகர்களின் ஃபேவரிட் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமான வுல்வரின் கேரக்டரில் ஹ்யூ ஜாக்மென் நடிக்கும் ஷூட்டிங் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.ஹாலிவுட்டிலிருந்து நாள்தோறும் ஏராளமான சூப்பர் ஹீரோ படங்கள் தற்போதைய காலக்கட்டத்தில் வெளியாகி வருகின்றன. ஆனால் 2000களில் வெளியான குறைவான சூப்பர்ஹீரோ படங்களில் கோஸ்ட் ரைடர், எக்ஸ் மென், ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் இன்றளவும் ஹாலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

அதிலும் கோஸ்ட் ரைடர் என்றாலே ரசிகர்கள் நினைவுக்கு வரும் ஒரே முகம் நிக்கோலஸ் கேஜ் தான். அதுபோல வுல்வரின் என்றாலே அது ஹ்யூ ஜாக்மென் மட்டும்தான். 20th Century Fox நிறுவனத்திடம் இருந்த வுல்வரின், எக்ஸ் மென் கதாப்பாத்திரங்களின் உரிமை டிஸ்னிக்கு விற்கப்பட்ட நிலையில் வுல்வரின் கதாப்பாத்திரத்திற்கு வேறு நபர் மாற்றப்படலாம் என பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு வுல்வரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பாக்ஸ் ஸ்டார் வெளியீட்டில் கடைசியாக வெளியான Logan படத்தில் வுல்வரின் இறந்து போவது போல காட்டப்பட்டிருந்ததால், Huge Jackman வுல்வரினாக நடிக்கும் கடைசி படம் லோகன் தான் என கூறப்பட்டது.இந்நிலையில்தான் பிரபலமான Deadpool படத்தின் மூன்றாம் பாகத்தில் Huge Jackman மீண்டும் வுல்வரினாக தோன்றுகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது டெட்பூல் 3 படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில் ஹ்யூ ஜாக்மென் க்ளாசிக் காமிக்ஸ் வுல்வரின் கெட்டப்பில் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ஹாலிவுட் ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில் டெட்பூல் 3ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

Edit by Prasanth.K

Deadpool 3 Set Video! pic.twitter.com/ZG93vqqdNu

— Matt Ramos (@therealsupes) July 11, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்