''லியோ'' படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையைப் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

புதன், 5 ஜூலை 2023 (20:53 IST)
விஜய்யின் லியோ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.
 
லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு கேரளாவில் பெரியளவில் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், அவர் தற்போது நடித்து வரும் லியோ படத்தின் கேரள வெளியீட்டு  உரிமையை கோகுலம் மூவீஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

.@GokulamMovies has grabbed #Leo Rights in Kerala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்