இந்த சூப்பர்மேனாவது நிலைச்சு நிப்பாரா? புதிய சூப்பர்மேன் இவர்தான்! – அப்செட்டான ரசிகர்கள்!

புதன், 28 ஜூன் 2023 (17:07 IST)
வருடம்தோறும் தங்களது சூப்பர் ஹீரோக்களை அடிக்கடி மாற்றி கடுப்பேற்றும் டிசி மீண்டும் சூப்பர்மேனை மாற்றி புதிய நடிகரை அறிவித்துள்ளது.ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்கள் மார்வெல், டிசி. டிஸ்னியின் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் டிசி சூப்பர்ஹீரோ படங்களை எடுத்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மார்வெல் சாதித்து வரும் பட வரிசையை டிசியால் தொட முடியவில்லை. ஜாக் ஸ்னைடர் தொடங்கி வைத்த DCEU சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்களிடையே நல்ல பிக் அப் ஆன சமயத்தில் ஸ்னைடரோடு சண்டை போட்டு அவரை வெளியேற்றியது வார்னர் ப்ரதர்ஸ். ஜாக் ஸ்னைடர் எடுத்த ஜஸ்டிஸ் லீகை ரிலீஸ் பண்ணியே ஆக வேண்டும் என ரசிகர்கள் போர் கொடி தூக்கிதான் அந்த படத்தையே கொண்டு வர வேண்டி இருந்தது.ரசிகர்கள் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே செய்து பழக்கப்பட்ட டிசி தற்போது ஏற்கனவே சூப்பர்மேனாக நடித்து வந்த ஹென்றி கெவிலை தூக்கி விட்டு மீண்டும் சூப்பர்மேன் கதையை ரீபூட் செய்கிறார்கள். ஜேம்ஸ் கன் உருவாக்கும் இந்த புதிய சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கு சூப்பர்மேனாக டேவிட் காரன்ஸ்வெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹென்ரி கெவில்லை சூப்பர்மேனாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சில ரசிகர்கள் இந்த சூப்பர்மேனாவது இனி நிலைத்திருப்பாரா? என்று கிண்டல் செய்து பேசி வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்