வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகையை மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடங்களில் ஈடுபடுவது வழக்கத்தில் உள்ளது. ஹோலிப்பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று. இதன் கொண்டாட்டங்கள் சாதி, மத இன வேறுபாடுகளைக் கடந்த ஒன்றாக இருக்கின்றன.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, பகவான் கிருஷ்ணரின் வாழக்கையோடு தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம் போன்ற ஊர்களில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.