இந்த முறை ஹோலி கொண்டாட்டம் நஹீ! பிரதமர் மோடி அறிவிப்பு!

புதன், 4 மார்ச் 2020 (12:57 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ள போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையில் மக்களிடையே கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இந்த முறை ஹோலி கொண்டாட்டத்தை தவிர்க்க போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ”கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்து நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்