தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயிலில், கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த வைபவத்தையொட்டி, பெண்கள் சீர்வரிசை தட்டுகள் ஏந்தி வர, சுவாமி மற்றும் அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மாலை மாற்றும் நிகழ்வு ஆகிய சடங்குகள் நடைபெற்றன.