ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை திருமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீராமர் சிலை திறப்பு

Mahendran
வியாழன், 4 ஜனவரி 2024 (18:39 IST)
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள கோவில்களில்  பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீராமர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. 10 அடி உயரம் உள்ள ஸ்ரீராமர் சிலையை ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம் அறக்கட்டளை சார்பில் திறந்து வைக்கப்பட்டது. 
 
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமர் சிலை திறப்பு விழாவையொட்டி இன்று முதல் 26-ந்தேதி வரை சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாடல், நடனம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்