சபரிமலை ஐயப்பன் கோவில், ஒவ்வொரு தமிழ் மாத துவக்கத்திலும் 5 நாட்களுக்கு மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும். இந்த நாட்களில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.
இந்த மாதம் வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளதால், இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகளின் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து, தீபாராதனை செய்து வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து, பதினெட்டாம் படியின் கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டும் நிகழ்வு நடைபெறும்.
மாதாந்திர பூஜை மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வரையிலான நாட்களில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். 19ஆம் தேதி இரவில் பூஜை முடிந்து, கோவில் நடை மூடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.