ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

Prasanth K

திங்கள், 30 ஜூன் 2025 (16:05 IST)
கிரகநிலை:
களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ், கேது - சுக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:
02.07.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
03.07.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார். 
17.07.2025  அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.07.2025 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.07.2025  அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.07.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே,  நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களிடம் கணிவுடன் பேசுவதன் மூலம் உங்கள் லாபத்தை அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். அனைத்தும் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராதவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.

பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். 

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

அனுஷம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

கேட்டை:
இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

பரிகாரம்: தினமும் முருகனுக்கு அரளி மலர்களை அர்ப்பணிக்க வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 15, 16, ஜூலை 12, 13

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்