கைரேகை காட்டும் அற்புதங்கள்!

Webdunia
அதிர்ஷ்டம் என்பதற்கு திருஷ்டிக்கு அப்பாற்பட்டது என்று பொருள்.  ஒருவருக்கு எந்தத் துறையில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை சொல்வதற்கு பல்விதமான கிரக அமைப்புகள் ஜாதகத்தில் உண்டு.

 


 
 
உதாரணமாக 2-ம் வீட்டுக்குரிய கிரகம் வலுப்பெற்றிருந்தால், அவருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு சிந்தனையால் ஏற்படக்கூடும். 5-ம்  வீட்டை அதிர்ஷ்ட வாய்ப்பு சிந்தனையால் ஏற்படக்கூடும். 5-ம் வீட்டை அதிர்ஷ்ட வீடு என்றே அழைப்பார்கள். அதை விதி வீடு,  பூர்வ புண்ணிய வீடு என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக பிராப்தம் இருந்தால்தான், அதாவது கொடுப்பினை இருந்தால்தான்  பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பை பெற முடியும். ஒரு ஜாதகம் கடவுளைக் காண்கிற சக்தியைப் பெறுகிறார் என்றால், அவருடைய  ஜாதகத்தில் சூரிய பலம் ம்க ஓங்கி அமைந்திருக்கும். ஆதமாவை பிரதிபலிப்பவன் சூரியன்.
 
இனி கைரேகைப் படி, சூரியன் கொடுக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு என்பதைப் பார்க்கலாம். மோதிர விரலின் அடிப்பாகம் தான்  சூரியமேடு ஒருவர் கையில் இது உப்பலாகவும், கம்பீரமாகவும் அமைந்திருந்தால், அவருக்கு சூரியனது பலம் உண்டு. சூரிய  விரல் மேட்டில் ஒரு செங்குத்து ரேகை இருந்தால், அவருக்கு புகழ், கீர்த்தி, செல்வம், செல்வாக்கு எல்லாம் அமைந்திருக்கும்.
 
ஒரு செங்குத்து ரேகையும், அதன் மேல் ஒரு நட்சத்திரக் குறியும் அமைந்திருதால், அந்த நபர் சிறந்த புத்திமானாக திகழ்வார்.  இவருக்கு புகழும், திடீர் அதிர்ஷ்டமும் உண்டாவது நிச்சயம். ரேகையில்லாமல் ஒரு நட்சத்திர குறி மட்டும் இருந்தால், பல  காலம் கஷ்டத்திக்குப் பின் அவருக்கு திடீர் அதிஷ்டம் உண்டாகும். சூரிய மேட்டில் சதுரக் குறி இருந்தால் செல்வந்தனாக  இருந்தும் எளிமையாக வாழ்வார். வட்ட வளையம் இருந்தால், பல காலம் மேட்டில் முக்கோணம் இருந்தால் சாஸ்த்திர ஆராய்ச்சியில் ஈடுபடுவார். சூலக் குறி தென்பட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
அடுத்த கட்டுரையில்