வரலட்சுமி விரதத்தின் சிறப்பினை கூறும் புராண கதைகள் !!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (11:42 IST)
ஆடி மாத வளர்பிறை வெள்ளியன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வரலக்ஷ்மி என்றாலே வரங்களை தருபவள். நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, வரத்தை  கொடுப்பவள் வரலக்ஷ்மி. பாற்கடலில் உதிர்த்த நன்னாளை, வரலக்ஷ்மி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.


பார்வதியின் சாபத்திற்கு ஆளான சித்ரநேமி என்ற தேவதை வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டித்து, சாப விமோசனம் பெற்றார். சௌராஷ்ட்டிர நாட்டின் ராணியாக இருந்த கரசந்திரிகா செல்வ வளத்தின் மமதையால், ஒருமுறை  மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு லக்ஷ்மியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வறுமையால் வாடினாள்.

ராணி கரசந்திராவின் மகள் சியாம பாலா, தெய்வாதீனமாக  ஒருமுறை வரலட்சுமி விரதத்தைப் பற்றி அறிந்தார். அதுமுதல், அந்த விரதத்தை கடைபிடிக்கத் தொடங்கினாள். சியாம பாலாவின் விரதத்தால் மகிழ்ந்த அன்னை மகாலட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள். தன் மகளின்நிலையைப்  பார்த்து, அவள் கடைபிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைபிடித்தாள். இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள் கரசந்திரா.

மகத நாட்டில்,குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு சாருமதி  என்ற பெண் தன்  கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அவள் தன் குடும்பத்தின்மீது அக்கறை கொண்டாள். சிறந்த பக்தி உடைய சாருமதி கனவில் வந்த லட்சுமி தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களையும் தருவதாக கூறினாள். அதன்படி, வரலட்சுமி விரதம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ்ந்தாள்.

சாருமதியின் முன்னேற்றத்தை பார்த்த பெண்கள், அவளிடம்   வரலட்சுமி விரதத்தைப் பற்றி கேட்டு தெரிந்து  விரதத்தை கடைபிடித்து, பெரும் பயனை அடைந்தனர்.  இவ்விரதம் மேற்கொண்டால் நீண்ட ஆயுள், செளபாக்கியம் கிட்டும். திருமணதோஷம் உள்ள கன்னிபெண்கள்  விரைவில் திருமணம் நடக்கும்.

வரலக்ஷ்மி விரதத்தன்று, புண்ணிய நதியில் நீராடுவது ஒரு வருடம் தொடர்ந்து வரலக்ஷ்மி விரதம் இருப்பதற்கு பலனைத்தரும். ஆகவே, கங்கை, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது வரலக்ஷ்மி விரதம் இருந்த பலனை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்