கிருஷ்ண ஜெயந்தியை எவ்வாறு வழிபட வேண்டும்?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (18:41 IST)
அடுத்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி வர உள்ளதை அடுத்து கிருஷ்ண ஜெயந்தியை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம். 
 
கிருஷ்ண ஜெயதியை சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபட வேண்டும். அன்றைய நாளில் கிருஷ்ணரின் கதைகளை பெரியவர்கள் சிறியவர்களுக்கு சொல்லி கிருஷ்ணரின் பெருமைகளை  சொல்ல வேண்டும். 
 
பெரும்பாலான ஊரில் சிறுவர் சிறுமிகளை கண்ணன் ராதை போன்ற வேடமிட்டு ஆராதனை செய்வார்கள். கிருஷ்ணனின் வழிபாட்டால் அகந்தை அகலும், மூர்க்க குணம் வராது ,இளைஞர்கள் தர்மசீலார்களாக வாழ்வார்கள், திருமண தடைகள் விலகி திருமணம் கைகூடும். வயல்களில் வளர்ச்சி கிடைக்கும், கடன்கள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது. 
 
குறிப்பாக தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள் என்பதும் அரசியல்வாதிகளும் கிருஷ்ணனுக்கு பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முறுக்கு, வெண்ணெய், பால்கோவா ஆகிவற்றை வைத்து வழிபட வேண்டும். கிருஷ்ணன் நாமத்தை உச்சரித்தபடி கிருஷ்ணரை வணங்கினால் ஏராளமான நன்மை கிடைக்கும் என்பது ஆன்மீகவாதிகள் கூறும் அறிவுரையாகும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்