கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாக இறைவனுடைய அருளை நல்கி, மருளைப் போக்கும் கருணைக் கடல் இறைவன் ஆவார்.
அகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை' என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள்.
நமஸ்கார வகைகள்
ஏகாங்க நமஸ்காரம்: தலையை மட்டும் குனிந்து வணங்குவது
த்ரியங்க நமஸ்காரம்: தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்
பஞ்சாங்க நமஸ்காரம்: (பெண்களுக்கு மட்டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்தல்
அஷ்டாங்க நமஸ்காரம்: (ஆண்களுக்கு) தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் படவேண்டும்.
இறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 முறை, தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும். கோவிலில், இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.
கருவறை கிழக்கு நோக்கி இருக்கும். கருவறை முன்னரே கொடிமரம் இருக்கும். பிரகாரத்தை வலம் வந்து எல்லா சந்நிதிகளிலும் வணங்கிய பின், கொடிமரத்தின் முன் வடக்கு முகமாக நின்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலில் கொடிமரம் தவிர வேறெந்த சந்நிதியிலும் தரையில் விழுந்து வணங்கக் கூடாது.