மிகுந்த பலன்களை வாரி வழங்கும் ஏகாதசி விரதம் !!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (15:22 IST)
ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.


சயன ஏகாதசி, பரிவர்த்தனை ஏகாதசி, உத்தான ஏகாதசி என்னும் பிரபோதன ஏகாதசி, ஸ்ரீவைகுந்த ஏகாதசி என்ற இந்த நான்கு ஏகாதசிகளையும் வைணவம் சிறப்பாகப் போற்றும்.

அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்வதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.

ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி 'சயனி" என்றும், தேய்பிறை ஏகாதசி 'யோகினி" என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை ஏகாதசி இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும் நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது இந்த ஏகாதசி.

பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பக்தர்கள், மாத ஏகாதசியில், மாதம் தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை சேவிப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்