வியாழக்கிழமைகளில் எந்த கடவுளுக்கு பூஜைகள் செய்ய உகந்தது தெரியுமா...?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:59 IST)
வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும்.


வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும்.

சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். இதனால் உங்களின் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும்.

வியாழக்கிழமை அன்று செய்யும் இந்த பூஜையில் வாழைப்பழத்தை தானம் வணங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

வியாழக் கிழமைகளில் விஷ்ணு கடவுளுக்கு பூஜை வழிபாடுகள் செய்யும் போது, மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு வைத்து படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வம் வளத்தை அதிகரிக்கச் செய்வார்.

வியாழக்கிழமைகளில் சிவபெருமான் மற்றும் குருவிற்கான பூஜைகளை செய்வதால், அன்று முழுவதும் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரித்து எப்போதும் நிலைத்து இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்