ஆஞ்சநேயரை வழிபட உகந்த நாட்கள் எவை தெரியுமா...?

வியாழன், 9 ஜூன் 2022 (07:29 IST)
வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். 


புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும் . இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும் .

ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த இரண்டு அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்கு அனுமனை தேர்ந்தெடுத்தனர் தேவர்கள் . அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள்.

ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் மற்ற கடவுள்களும் சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து ‘இந்த வெண்ணை உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

அதன்படி அனுமன் கையில் அசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார். ஆகவே அதே போல நாம் அனுமனை வெண்ணை சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணை உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்