ஆவணி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Mahendran

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:31 IST)
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம், செப்டம்பர் 7-ஆம் தேதி  அதிகாலை 1.46 மணிக்குத் தொடங்கி, அதே நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
பௌர்ணமி நாள், ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளில், குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்