அக்டோபர் மாத ராசிபலன்கள் 2025! – சிம்மம்!

Prasanth K

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (17:31 IST)
அக்டோபர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மன வலிமை அதிகரிக்கும். பெண்களுக்கு நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.

மகம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.

பூரம்:
இந்த மாதம் ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.  காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 06, 07
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 15, 16

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்