பரு இருந்தால் முகத்துக்கு சோப் போடக்கூடாது. சோப்பில் உள்ள கொழுப்பு மறுபடி சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும். பரு சீக்கிரம் போகாது. இதற்கென்றே சில ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. அக்னே ஃபேஸ்வாஷ் என்று கேட்டு வாங்கி, சோப்புக்கு பதில் முகத்துக்குப் போடலாம்.
முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை கருப்புத் தழும்பாக மாறிவிடுவதில்லை. பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவின் உள்ளிருக்கும் சீழை எடுக்கிறேன் என்று கிள்ளி கிள்ளி எடுத்தாலோ, அல்லது ஃபேஸ் பேக் போட்டு அழுத்தமாக தேய்த்தாலோதான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நின்று விடுகிறது.