கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, பாதாம் எண்ணெயிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.