தேனை பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு...!!

ஒரு ஸ்பூன் பட்டை தூளுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமத்தில் தடவி பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தமான நீரில் கழுவவேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்படும் பருக்கள், பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மற்றும் சருமத்தில் ஏற்படும்  கருத்திட்டுகள் ஆகிய சரும பிரச்சனைகள் நீங்கும்.
ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் என்றும்  இளமையுடன் இருக்கும்.
 
ஒரு ஸ்பூன் தேனுடன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் தடவி வந்தால், சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் என்றும்  இளமையுடன் காணப்படும்.
ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கினை நீக்கும்.
 
உதட்டில் தேனை தடவி, ஒரு டூத் பிரஷினால் மசாஜ் செய்யவேண்டும். இதனால் உதடுகள் சிவப்பாக மாறுவதோடு, எந்தவித பக்க  விளைவுகளும் ஏற்படுத்தாது.
 
பாலாடையில் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் உதடு மிகவும் மென்மையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்