சில பயன்தரும் இயற்கை முறையிலான அழகு குறிப்புகள் !!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க, ஆரஞ்சுப் பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தைக்  கழுவுங்கள். பத்தே நாளில் கருவளையங்கள் நீங்கி முகம் பிரகாசிக்கும்.

இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பதால் கண்களுக்குத் தளர்ச்சி ஏற்பட்டால், ஒரு துண்டு வெள்ளரிக்காயைக் கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் கண்களை மூடிக் கொண்டால் தளர்ச்சி நீங்கும்.
 
கசகசாவை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து, அடிக்கடி தடவி வந்தால், சில தினங்களில் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி, சருமம் இயற்கை நிறம்  பெறும்.
 
குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்பட்டால், வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின்மீது பூசி வர மறையலாம்.
 
உப்பு கலந்த எலுமிச்சம் பழச் சாறைப் பற்களில் தேய்த்தால் பற்களில் உள்ள கறை மறையும். ஈறுகள் பலம் பெறும்.
 
கை, கால், முகம், கழுத்துப் பகுதிகள் வறண்டு இருந்தால், சிறிது கடலைமாவு, மஞ்சள் பொடி சேர்த்துக் குழைத்து, இந்தப் பகுதிகளில் பூசுங்கள். கால் மணிநேரம் கழித்து சோப் போடாமல், வெறும் தண்ணீரால் கழுவுங்கள். வறண்ட தோல் பளபளப்பாகும்.
 
கசகசாவை பாசிப்பருப்புடன் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்