கைகளை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

சனி, 15 அக்டோபர் 2022 (12:00 IST)
சர்க்கரையை விளக்கெண்ணெய்யுடன் கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் தூங்கப் போகும் முன் கைகளில் தேயுங்கள். ஐந்து நிமிடம் கைகளை முன்னும் பின்னும் தேய்த்து பின் கழுவுங்கள். அதற்கு பின் வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் சீக்கிரம் கடினத்தன்மை மறைந்து மிருதுவான கைகள் கிடைக்கும். விளக்கெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.


தாவர வெண்ணெய் சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் காலை மாலை என இரு வேளைகளில் கைகளில் தேய்த்து வந்தால், கைகளில் ஏற்படும் சொரசொரப்பு நீங்கி விடும். மிதமான ஈரப்பதத்தை அளிக்கும். இது கைகளில் ஏற்படும் சுருக்கத்தையும் போக்குகிறது.

பால் மற்றும் கிளசரின் : காய்ச்சிய பால் சிறிது எடுத்துக் கொண்டு அதில் கிளசரின் மற்றும் எலுமிச்சை சாறு 4 துளிகள் விடவும். இதனை கலக்கி, கைகளில் தேயுங்கள். நாளடைவில் உள்ளங்கைகள் மிருதுவாகும்.

முட்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதாம் பொடி மற்றும் தேன் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கைகளில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற விடவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், உள்ளங்கைகளில் இருந்த கடினத்தன்மை போய்விடும்.

மேலும் படிக்க:
கைகளை பராமரிக்க சில அற்புத அழகு குறிப்புகள் !!

சோள மாவில் சிறிது நீர் கலந்து கைகளில் நன்கு தேய்க்க வேண்டும். ஒரு வாரத்தில் உங்கள் உள்ளங்கைகள் மிருதுவாகும். தக்காளி சாறு சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு மற்றும் கிளசரின் சேர்த்து, நன்றாக கலந்து கைகளைல் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

நிறைய நீர் குடிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு குடித்தால் மொத்த சருமமும் மிருதுவாக இருக்கும். உடலில் போதிய அளவு ஈரப்பதம் இல்லையென்றாலும் உள்ளங்கைகள் சொரசொரப்பாக கடினமாக இருக்கும்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்