ஸ்டார் ஃப்ரூட் என்னும் நட்சத்திரப் பழத்தை பலர் அறியப்படிகின்ற இப்பழம். தமிழில் விளிம்பிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான். கலோரி சத்து மிக, மிக குறைவு. அதேபோல கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது.
ஸ்டார் ஃப்ரூட்டில் விட்டமின் பி, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, எண்ணற்ற ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்தது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது இந்த ஸ்டார் பழம். குறிப்பாக நார்ச்சத்து இதில் சற்று அதிகம். நார்ச்சத்து அதிகமிருப்பதால் நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனை தீருவதற்கு உதவியாக இருக்கும். நன்மை தரக் கூடிய நிறைய நுண்ணுயிர்கள் வளர வகை செய்யும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நட்சத்திர பழங்களை வாங்கி சாப்பிடலாம். உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்திடும். நட்சத்திரப் பழத்தில் உள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்தானது நம் உடலின் கொழுப்புகளையும் கரைக்கக் கூடியது. குறிப்பாக, கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவதால் நமது இதய நலனும் மேம்படும்.