பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.
பொன்னாங்கன்னி கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் வளமான அளவில் உள்ளது.
பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு வெகுவாக மேம்படும். மேலும் பொன்னாங்கன்னி கீரையை வாரம் இரணடு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது.