முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான சத்துக்களை கொண்டுள்ள மாதுளம் பழம்...!!
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ஈ மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
மாதுளை சருமத்திற்கு அழகு சேர்க்கும் கொலஜனை பராமரிக்க உதவுகிறது. மேலும் நம்முடைய சருமத்தினை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைக்கிறது.
முகத்தின் தோலிற்கு மாதுளைப் பழத்தினை முகத் தேப்பானாகக் கூடப் பயன்படுத்தலாம். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட முகத்தேய்பான்களை விட மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித பக்கவிளைவுகளையும் தருவதில்லை.
கடுமையான சூரியக் கதிர்களின் விளைவுகளை மாற்றியமைப்பதற்கு மாதுளைப் பழங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மாதுளைப் பழம் சூரியனிலிருந்து பாதுகாக்கும் கலவைகளைக் கொண்டுள்ளது. இதனால் சருமத்தின் தீவிரமான சேத்த்திலிருந்து பாதுகாக்கிறது.
முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தினை இரும்புச்சத்து மாதுளையில் அதிக அளவில் உள்ளன.
மாதுளைப் பழச்ச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், தலைசுற்று களைப்பு மற்றும் சோரிவினைக் குணப்படுத்துகிறது. மேலும் இப்பழம் அதிகப்படியான அமிலத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.