கசகசாவை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து, அடிக்கடி தடவி வந்தால், சில தினங்களில் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி, சருமம் இயற்கை நிறம் பெறும்.
கை, கால், முகம், கழுத்துப் பகுதிகள் வறண்டு இருந்தால், சிறிது கடலைமாவு, மஞ்சள் பொடி சேர்த்துக் குழைத்து, இந்தப் பகுதிகளில் பூசுங்கள். கால் மணிநேரம் கழித்து சோப் போடாமல், வெறும் தண்ணீரால் கழுவுங்கள். வறண்ட தோல் பளபளப்பாகி மின்னலடிக்கும்.
கசகசாவை பாசிப் பருப்புடன் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.