உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்...!!

ஆரோக்கியமான உணவில் கீரை வகைகள் முதலிடத்திலுள்ளன. நார்ச்சத்து நிறைந்தது மட்டுமல்லாமல், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி, பீட்டா காரோடீன் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தவை.

உயர்தர நார்ச்சத்து, வைட்டமின் சி, மற்றும் உடல் செல்களை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆப்பிளில் அதிகம் உள்ளன. நாள்தோறும் ஒரு ஆப்பிளை  சாப்பிடுவதன் மூலம் மருத்துவரைத் தவிர்க்கலாம். காலை உணவுக்கு பிறகு அல்லது மதிய உணவுக்கு முன்பு ஆப்பிளை உணவாக எடுத்துக்கொள்வது உகந்தது.
 
மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் இயக்கம் சீராகும். மஞ்சளில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்டான குர்குமின் புற்றுநோயைக் குறைப்பதுடன்,  இதய நோய், அல்சைமர் நோய், வாதம் மற்றும் மனச்சோர்வுக்கு சிறந்த எதிர்வினையாக உள்ளது.
 
எலும்புகளற்ற கோழிக்கறியில் 31 கிராம் புரதம் உள்ளது. ஆரோக்கிய உணவின் பட்டியலில் இதனால் கோழிக்கறியும் இடம் பெற்றுள்ளது. உடலுக்கு நாள்தோறும் தேவைப்படும் புரதத்தில் 50 சதவிகிதம் கோழியில் கிடைக்கிறது. இதை முழு உணவாகவோ அல்லது சூப், சாலட் போன்ற துணை உணவாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.
 
முட்டை அனைத்து விதங்களிலும் சீரான உணவு. இதில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் அமிலோ அமிலங்கள் உள்ளன. முட்டையில்  உள்ள மஞ்சள் கரு ரத்தக்கொழுப்பிற்கு காரணமில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை உணவாக முட்டையை  எடுத்துக்கொள்வது உகந்தது.
 
நெல்லிக்காய் மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை  வெளியேற்றும். நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனை தினசரிஅதிகாலை உட்கொள்வது சிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்