பேஷியலில் பல வகைகள் உள்ளன. பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியலும் பொருந்தாது. நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் பொருந்துமே அதைத்தான் நாம் தேர்வு செய்யவேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளைக் கூறி, அழகுக் கலை நிபுணரின் தேர்வுக்கு விட்டுவிடலாம்.
பொதுவாக பருக்கள் இருப்பவர்களுக்கு பேஷியல் செய்வதில்லை. அவர்களுக்கு மினி பேஷியல் மட்டுமே செய்யப்படுகிறது. முகத்தை க்ரீம் கொண்டு சுத்தப்படுத்தி, சில கிரீம்களை போட்டு எளிதான பேஷியல் மட்டுமே செய்யவார்கள்.