தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.