சரும வறட்சியை போக்க பழங்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வது எப்படி...?

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (17:28 IST)
சிலருக்கு இயற்கையாகவே வறட்சியான சருமம் இருக்கும். சிலருக்கு பனி பொழியும் போது மற்றும் பருவநிலை மாறும் போதும் சிலருக்கு ஏற்படும். பெரும்பாலோர் சரும வறட்சியைத் தடுக்க தினமும் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். என்ன தான் எண்ணெய் பயன்படுத்தினாலும், அந்த எண்ணெய் சிலரது சருமத்தில் முற்றிலும் உறிஞ்சி, மீண்டும் வறட்சியை உண்டாக்கும்.


வறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம் வறட்சியைத் தடுக்கலாம்.

மாதுளை ஃபேஸ் பேக்: ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மாதுளை ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் டோனரைப் பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

ஆரஞ்சு ஃபேஸ் பேக்: ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின் அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கை வாரந்தோறும் பயன்படுத்தினால், சரும வறட்சியால் அசிங்கமாக தோல் உரிந்து காணப்படுவதைத் தவிர்க்கலாம்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்: ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த, சரும வறட்சி அகலும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்