சருமத்துக்கு பளபளப்பை கொடுக்கும் அன்னாசிப்பழம் எப்படி...?

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (17:08 IST)
சருமத்தின் இறந்த செல்களை வெளியேற்ற உதவும் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் அன்னாசியில் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். சருமத்தில் உள்ள பழைய செல்களை அகற்ற இது உதவுகிறது.


அன்னாசியை சாப்பிட்டால், மென்மையான சருமம் கிடைக்கும். அன்னாசி பழ ரசம், தோலில் உள்ள துளைகளை சுருக்கச் செய்ய உதவும். வைட்டமின் சி நிறைந்த அன்னாசிப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். நல்ல மாற்றம் தெரியும்.

சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து கலந்து இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இதனை தினமும் பயன்படுத்தலாம்.

சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கும். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்