இயற்கையான முறையில் கால் வெடிப்பு நீங்கி பலன் தரும் அழகு குறிப்புகள் !!

நமது கால் அழகாக இருப்பதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் உண்டாகும். சிலருக்கு சோப்பில் இருக்கும் கெமிக்கல் ஒவ்வாமையினால் வெடிப்பு ஏற்படும்.

* கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு  மறைந்து, பளபளப்பாகும்.
 
* பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.
 
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
 
* இரவு நேரங்களில் வெதுவெதுப்பான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரை  செய்யலாம்.
 
* தினமும் குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கலாம்.. கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதைப் பயன்படுத்தியும் கால் பாதங்களை  தேய்த்து வர வெடிப்பு மறையும்.
 
* கடுகு எண்ணெய்யை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
 
* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்
 
* கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்