முகத்தில் ஏற்படும் சருமத்துளைகளை போக்க உதவும் அழகு குறிப்புகள்....!!
உதடு வெடிப்பு நீங்க:தூங்குவதற்கு முன் பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவவேண்டும். மறுநாள் காலை காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு பன்னீரில் நனைத்து துடைக்கவும்.
பீட்ரூட் காய்களை நறுக்கும்போது அதன் தோலை நாம் நீக்குவோம். அந்த தோலை உதட்டில் தேய்த்தால் நாளடைவில் உதட்டில் உள்ள வெடிப்புகள் நீங்கி ரோஜா இதழ்கள் போன்ற நிறம் மாறி உதடுகள் மென்மையாக காணப்படும்.
வறண்ட சருமம் நீங்க: அதிகளவு வறண்டு போன சருமத்திற்கு தேன் கலந்த முக பேக் நல்லது. இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி பவுடர் போட்டு நன்றாக பேஸ்ட் போல் குழைத்துவிடவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன் வாஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வர வறண்ட சருமம் நீங்கி முகம் மென்மையாக மாறும்.
கால் வெடிப்புகள் நீங்க: காலில் உள்ள பித்த வெடிப்பு நீங்குவதற்கு எலுமிச்சைச் சாறுகள் சிறிதளவு உப்பு கலந்து வெதுவெதுப்பான நீரில் காலை வைக்கவும். இதனால் பித்த வெடிப்பு மற்றும் கால்வலி நீங்கிவிடும்.
அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைபடும் காட்டன் துணியை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும்.