சாப்பிட்ட உடன் எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்வோம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (23:24 IST)
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என நம் வீட்டில் உள்ளவர்கள் செல்லுவதுண்டு. அவை எந்த பொருள்கள் என்று பார்ப்போம். ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்பது பற்றியும் பார்ப்போம்.
 
சாப்பிட்டவுடன் டீயோ, க்ரீன் டீயோ குடிக்கக்கூடாது. ஏனெனில் தேயிலையில் உள்ள ஆசிட், உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் தடைபடுத்தும். சாப்பிட்டு அரைமணிநேரம் கழித்து டீ குடிக்கலாம். எனவே சாப்பிட்ட உடன் தேநீர் அருந்தும் பழக்கமிருந்தால்  தவிர்க்கவேண்டும். 
 
 
சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிட கூடாது. ஏனெனில் அது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
 
சாப்பிட்ட பிறகு லேசாக பெல்ட்டை தளர்த்தி விடுவதுண்டு. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.
 
 
 
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என கூறுவதுண்டு. ஆனால் இப்படி உடனடியாக நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.
 
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. இதனால் வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும். எனவே சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்லக்கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம்  முதல் இரண்டு மணிநேரம் வரை கழித்தே உறங்க வேண்டும்.
 
சாப்பிட்ட உடனேயே குளிக்கக்கூடாது ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு  அடையச் செய்யக்கூடும். சாப்பிட்டு இரண்டு மணிநேர இடைவெளிக்கு பின்னரே குளிக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்