நவரத்தினங்களின் மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா...!

Webdunia
நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம்  மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, எமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல  கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிகளுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம். நவரத்தினக் கற்கள்  சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது.
 
நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகியவை ஆகும். 
 
மாணிக்க மணியானது இரத்தசோகை, கண் நோய், உடல் சோர்வு, இருதயக் கோளாறு போன்றவற்றை தீர்க்கும்.
 
முத்துமணியானது சுவாசக் கோளாறு, மனவளர்ச்சியின்மை, தொண்டை சம்பந்தமான கோளாறுகள், தலைவலி, தூக்கமின்மை, மனநோய் போன்றவற்றை  தீர்க்கும்.
பவழமானது வலிப்பு நோய், மகப்பேரின்மை, விரை வீக்கம், குடலிறக்கம், கல்லீரல் கோளாறு போன்றவற்றை தீர்க்கும்.
 
மரகதமணி சோம்பல், தூக்கமின்மை, பசின்மை, கண் நரம்பு, முதுகு தொடர்பான கோளாறு போன்ற நோய்கள் தீர்க்கும்.
 
வைரம் பாலுணர்வு தொடர்பான நோய்கள், சரும வியாதிகள் போன்றவற்றை போக்கும்.
 
புஷ்பராகம் அணிவதால் கல்லீரல் கணையம், தொடர்பான வியாதிகள், கழுத்து வீக்கம், வயிறு கோளாறு, தைராய்டு சுரப்பிக் கோளாறு, அஜீரணம் போன்ற  பிரச்சனைகள் நீங்கும்.
 
நீல ரத்தினம் அணிவதால் வாதநோய், சிறுநீரக கோளாறு, கீல்வாதம் போன்றவற்றை குணப்படுத்தும்.
 
வைடூரியம் அணிவதால் சளி, கபம் போன்ற பிரச்சனைகள் விலகும். உடல் கழகாகும்.
 
கோமேதகம் ரத்தினம் அணிவதால் வாயு கோளாறு, பாலியல் நோய் போன்றவை கட்டுப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்