முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை போக்க உதவும் வழிகள்...

Webdunia
தேன் இலவங்கப்பட்டை தோலுக்கான உடனடி சிகிச்சைகளில் ஒன்று. தேன் வெற்றிகரமாக புள்ளிகளை நீக்குகிறது. மற்றும் அது  தோலுக்கு மின்னல் போன்ற ஒளியைத் தருகிறது.

 
தேன் ஒரு சோட்டு எடுத்து, அத்துடன் இலவங்கப்பட்டை பொடி ஒரு சிட்டிகை சேர்த்து படுக்கைக்கு செல்லும் முன் இரவில்  உங்கள் முகத்தில் உள்ல புள்ளிகளின் மூது தடவவும். மறுநாள் காலை, சுத்தமான நீரினால் முகத்தை கழுவவும். இது தோலில்  சிகிச்சையை மெதுவாக செய்யும். ஆனால் திறப்பட நிறமூட்டலோடு கரும்புள்ளிகளையும் குறைக்க உதவுகிறது.
 
கற்றாழை
 
கற்றாழை இலையை வெட்டி ஒரு சுத்தமான கத்தி கொண்டு அதை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். நேரடியாக வட்ட  இயக்கங்களில் உங்கள் முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டு கழுவ  வேண்டும்.
 
முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். ஏனெனில்  இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும்  பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.
 
வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை  ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று  நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக  இருக்கும்.
 
பப்பாளி
 
பப்பாளியில் உள்ள பாப்பெயின் நொதி தோலிலுள்ள புள்ளிகளை குறைக்கிறது மற்றும் தோலை புதுபிக்க செய்கிறது. மேலும்  பச்சை பப்பாளி கூழ், பழுத்த பப்பாளியை விட பாப்பெயின் அதிகமாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்