உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (23:23 IST)
சீரகம் சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி  பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.
 
* வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை  குறையும்.
 
* சீரகம் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை – 1/2, தண்ணீர் – 1 1/2 டம்ளர், செய்முறை: இரவில் படுக்கும் போது நீரில்  சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில்  எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை  குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.
 
* கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
 
* சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
 
* நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில்  குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
 
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
 
* ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால்  உடல் பருமன் குறையும்.
 
* பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்