இந்த பழம் பயோட்டின் என்னும் வைட்டமின் சத்தின் மிகப்பெரிய மூலமாகும். இது தோல் வறட்சியை தடுப்பதோடு, ஆரோக்கியமான தோல் செல்கள் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இப்பழத்தின் சாறு அல்லது மில்க் ஷேக் தினமும் மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக் கொண்டால், வறண்ட சருமத்தில் ஒரு மாயாஜால மற்றும் வியத்தகு மாற்றம் ஏற்படுகிறது.
அவகேடோ பழத்தில் லுடீன் என்ற ஆன்டிஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகோடோவில் உள்ளது.
ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது, மூப்படைதலை தடுத்து இளமையை தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கும்