உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 நிமிட லிப் டூ லிப்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (16:21 IST)
தினமும் 5 நிமிடம் லிப் டூ லிப் முத்தம் உடலின் ஆரோக்கியம் மேம்படுத்த உதவும்.

 
அன்பை பறிமாற முத்தம் கொடுப்பது வழக்கம். முத்தம் புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் உடலிற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். குறிப்பாக லிப் டூ லிப் முத்தம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தினமும் 5 நிமிடம் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
 
அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது உடலில் அட்ரினலின் மற்றும் நோர்அட்ரினலின் வெளியீடு ஊக்குவிக்கப்படும். இதனால் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து மிகவும் உற்சாகமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்யும்.
 
முத்தம் கொடுத்த பின் வேகமாக சுவாசிப்போம். அப்போது வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் தடுக்கப்படும். தினமும் காலை முத்தம் கொடுப்பதால் வாழ்நாள் நீடிக்கும் என ஆய்வு கூறுகிறது. 
 
லிப் டூ லிப் கொடுப்பதால் பற்கள் வெள்ளையாவதோடு பல் சொத்தையாவது தடுக்கப்படும். மன அழுத்தம் நீங்கும். லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதன் மூலம் கலோரிகள் எரிக்கப்படும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுவதை தடுக்கும்.
 
முத்தத்தால் இதய ஆரோக்கியம் இயற்கையாகவே மேம்படும். முத்தம் கொடுக்கும் போது உணர்வுகள் தூண்டப்படுவதால் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைவான அளவில் இருக்கும். மேலும் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்