இதய பிரச்னைகள் இல்லாமல் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வந்துவிட்டாலும்கூட, சரியான பராமரிப்புடன், இயல்பான வாழ்க்கையை தொடரலாம். மருந்துகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், பயம் போன்றவை இல்லாமல் யோகா, தியானம், நடைப்பயிற்சி மூலம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
மீண்டும் மாரடைப்பு வராமல் பாதுகாப்பதே முக்கியம். உணவு கட்டுப்பாடும் அவசியம். உப்பும் கொழுப்பும் குறைவான உணவுகளை, சிறிய அளவில், இடைவெளியுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுரையை எப்போதும் பின்பற்ற வேண்டும்.
பயணிக்க வேண்டியிருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்றுவிட்டு கிளம்ப வேண்டும். தேவையான மருந்துகள், பரிசோதனை முடிவுகள், டாக்டரின் எண் போன்றவை அருகில் இருக்கட்டும். வீட்டு முகவரி, அவசர எண்கள் போன்றவை எப்போதும் பக்கம் இருக்க வேண்டும்.