தொடை சதையை எளிமையாக குறைப்பது எப்படி?

திங்கள், 11 செப்டம்பர் 2023 (18:15 IST)
பொதுவாக உடல் எடையை குறைப்பதே ஒரு சவாலான காரியம் என்பதும் குறிப்பாக தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைப்பது மிகவும் கஷ்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முறையான உடற்பயிற்சி மூலம் தொடையில் உள்ள சதையை குறைக்கலாம்.  ஒரு சிலருக்கு இயற்கையாகவே தொடையில் அதிகமாக சதை அமைந்திருக்கும். இதனால் கால்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் நடக்கவே சிரமமாக இருக்கும். 
 
இதற்கு முறையான உணவு பழக்க வழக்கங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அதேபோல் எண்ணெயில் வறுத்தது பொரித்தது மசாலா பொருட்கள் ஆகியவற்றையும் தவிர்த்து விட வேண்டும். 
 
காய்கறிகள் கீரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  தொடை சதை இருகுவதற்கு ஸ்கிப்பிங் சைக்கிளிங் ஆகிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.    தகுந்த பயிற்சியாளர்களின் உதவியுடன் சில பயிற்சிகளை செய்தால் தொடை சதையை எளிதில் குறைத்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்