தலைமுடி உதிர்வதை தடுக்க சின்னவெங்காயம் போதும்.. பயனுள்ள டிப்ஸ்..!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (19:06 IST)
முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது. 
 
சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும். 
 
பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு  ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.  
 
இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வாழ்ந்தது முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்