தூங்குவதற்கு சிறந்த நேரம் எது? எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்..!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (19:08 IST)
ஒரு மனிதனுக்கு உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் முக்கியம் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு. 
 
மனிதன் மட்டும் இன்றி அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமானது தூக்கம்.  ஆனால் அதே நேரத்தில் தூக்கத்தை ஒரு சரியான அட்டவணையை பயன்படுத்தி தூங்க வேண்டும். 
 
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.  தாமதமாக தூங்குவதும் தாமதமாக படுக்கையிலிருந்து எழுவதும் நல்ல பழக்கமல்ல.  ஒரே நேரத்தில் தூங்குவதையும் எழுவதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  
 
குறைந்தது ஆறு முதல் 8 மணி நேரம் ஒரு மனிதன் தூங்க வேண்டும். தூக்கம் கெடுவதால் செரிமான அமைப்பு பாதிக்கும், இதனால் பல்வேறு நோய்கள் வரலாம். மேலும் தூக்கம் சரியில்லாமல் இருந்தால் கண்களையும் பாதிக்கும்.  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்