உடல் பருமனை குறைக்க வழிமுறைகள்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (23:15 IST)
உடலை குறைக்க தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக்  குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள சதைகளை குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
 
* தினமும் 4, 5 பல் பூண்டு எடுத்து பாலில் வேகவைத்து இரவில் உண்ணலாம். இது உடலில் உள்ள கெட்டகொழுப்பு குறைவதுடன் உடல் பருமனை குறைக்க  உதவும். 
 
* நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து இரவு உணவுக்கு முன்  எடுத்துக்கொள்ளலாம்.
 
* அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
 
* சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
* உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு,  வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
 
* இது தவிர பப்பாளி காயை சமையலாக செய்து சாப்பிடலாம். மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
 
* அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம். வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
 
* காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும். மேலும் தினமும்  குறைந்தது அரை மணி நேரம் நடை பயிற்சி அவசியம். நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்