உடலில் ஹீமோகுளோமின் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (18:49 IST)
உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும். எனவே ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து அதிகம் உள்ள அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். ரத்த பற்றாக்குறையை இந்த பழம் பூர்த்தி செய்யமுடியும் கால்சியம் மற்றும் நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளது.
மேலும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பேரிச்சம்பழங்களை சாப்பிடலாம். இரும்பு சத்து வைட்டமின்கள் கால்சியம் ஆகியவை இதில் உள்ளனர்
அதேபோல் உலர் திராட்சை, பாதாம் பருப்பு ஆகியவை சாப்பிடலாம். பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது