வாழைப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (21:26 IST)
வாழை மரத்தில் உள்ள வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம் என அனைத்துமே நல்லது என்ற நிலையில் வாழைப்பூ சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை தற்போது பார்ப்போம். 
 
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை வாழைப்பூ சரி செய்யும். ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை இருந்தால் சரி செய்யும்  வாழைப்பூ ரத்த ஓட்டம் சீராகவும் உதவி செய்யும். 
 
வயிற்று வலி உள்ள வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை குறைக்க நினைப்பவர்கள் மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் ரத்த அழுத்தம் ரத்தசோகை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம். 
 
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து வாழைப்பூ என்று சொல்லலாம், வாழைப்பூ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  
 
வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு நன்றாக வேக வைத்து உப்பு போட்டு அவித்தோ அல்லது பொறியல் செய்தோ சாப்பிடலாம். வாழைப்பூவை வேகவைத்த சாறையும்  அருந்தலாம். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்