சர்க்கரை நோய் வந்தால் முடி அதிகமாக உதிருமா?

வெள்ளி, 23 ஜூன் 2023 (20:14 IST)
சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு இணை நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு முடி உதிருவதும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சர்க்கரை நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டால் முடி உதிர்தல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 
 
சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் பாக்டீரியா தொற்று காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும் என்று தெரிகிறது. எனவே முடி உதிர்வதை தடுப்பதற்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
சர்க்கரை நோய் காரணமாக அலர்ஜி ஏற்பட்டு அதன் காரணமாகவும் முடியின் வேர்கள் சேதமாகும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் புரதச்சத்துக்களை அதிகம் சேர்த்து முடியை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்