குழந்தைகளின் மூளைத்திறனை அதிகரிக்க உதவும் காய்கறிகள்..!

புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:53 IST)
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு சில காய்கறிகளை கொடுத்து வளர்த்தால் அவர்களது மூளை திறமை நன்றாக இருக்கும் என்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே காய்கறிகள் கீரைகள்  போன்ற உணவுகளை கொடுத்து பழக வேண்டும். கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் ஆகியவைகளை உணவில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். 
 
குறிப்பாக புதினா இலைகள் கொடுத்தால் குழந்தைகளின் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் குழந்தைகளுக்கு சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம். குழந்தைகளை சரியாக நேரத்தில் தூங்க வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். நன்றாக தூங்கினால் தான் மூளை இரவில் நன்றாக ஓய்வெடுத்து காலையில் புத்துணர்ச்சியோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்