பாலியல் கல்வி நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (06:48 IST)
பெண்களுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகளவு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் பாலியல் குறித்த புரிதல் மக்களிடம் இல்லை என்பதுதான் என்றும் பள்ளிப்பருவத்திலேயே பாலியல் குறித்த பாடங்கள் இருந்தால் இந்த குறை நீக்கப்படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.



 


இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று பாலியல் கல்வி பள்ளியில் தேவையா? என்பது குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. இதன் முடிவுகள் பின்வருமாறு:

பள்ளியில் பாலியல் கல்வியை அனுமதிக்கலாமா? என்ற கேள்விக்கு 90% பேர் ஆம் என்றும், 10% பேர் வேண்டாம் என்றும் பதிலளித்துள்ளனர்.

பாலியல் கல்விஎன்பதை நமது சமூகம் சரியாக புரிந்து கொள்ளூமா? என்ற கேள்விக்கு ஆம் என்று 5% பேர்களும், கல்வித்துறைக்கு கூடுதல் தெளிவு தேவை என்று 41% பேர்கௌம், புரிந்து கொள்ளாது என்று 54% பேர்களும் பதில் கூறியுள்ளனர்.

பாலியல் கல்வி நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு பாலியல் குற்றங்கள் குறையும் என்று 72% பேர்களும், குறையாது என்று 6% பேர்களும், மாற்றம் எதுவும் இருக்காது என்று 12% பேர்களும் பதிலளித்துள்ளனர்.

மொத்தத்தில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை தொலைகின்ற பல மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி கண்டிப்பாக தேவை என்றும். செக்ஸ் கல்வி இல்லாததால் தான் செக்ஸ் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை ஆகிவிட்டதாகவும் கருத்து வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்